சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது நண்பரான ஜெகதீஷை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டற்கு வந்த ஜெகதீஷும், யுவராஜும் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறவே அதிக சத்தம் போட்டுள்ளனர்.
இதனால், எரிச்சலடைந்த பக்கத்து வீட்டினர், குடித்துவிட்டு ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.