சென்னை அண்ணாநகர் 6ஆவது அவென்யூவைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவர் பிரபல ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான சங்கர் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்.
இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் காவலர் உடையில் வந்த ஒருவர் தன்னை கிரைம் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எனவும், தன்னுடன் வந்த மற்ற இருவர் மஃப்டியில் வந்த கிரைம் பிரிவு காவல் துறையினர் என்றும் கூறி கைதுசெய்ய முயன்றுள்ளனர்.
இதனால், ஸ்ரீதேவி உன்னிதனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் திரண்டுவந்துள்ளனர். போதையில் வந்திருந்த அந்த நபர் குடும்பத்தினர் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தமையால் சந்தேகமடைந்தனர்.