சென்னையில் கடந்த சில நாள்களாக கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து மாணவிகள் பலர் பாலியல் புகாரை அளித்து வருகின்றனர். ஏற்கெனவே, பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன்பிறகு சேத்துப்பட்டு, ஆர்.ஏ.புரம், செனாய் நகர், பூக்கடை உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரக்கூடிய பள்ளி, பயிற்சி மைய மாணவிகள் புகார் அளித்தனர். இதுமட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட மாணவிகள் வாட்ஸ்-ஆப் மூலமாகவும் பாலியல் புகார் அளித்து வருகின்றனர்.
பாலியல் புகார்: பயிற்சியாளர் நாகராஜன் போக்சோவில் கைது
20:58 May 29
சென்னை: தடகள வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தடகள வீராங்கணைகள் பூக்கடை காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதாவது தடகள பயிற்சிக்காக செல்லும் போது பயிற்சியாளர் நாகராஜன் பயிற்சி கொடுப்பதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், ஒத்துழைத்தால் தடகளப்போட்டிகளில் சிறப்பாக உயர்த்திவிடுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் நாகராஜனின் பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காமல் போனால் பயிற்சியை நிறுத்திவிடுவது வழக்கம். ஏதேனும் பிரச்சனை செய்தால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் வந்துள்ளார். இதுமட்டுமின்றி வேறு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் அந்தப் பெண் குறித்து தவறான கருத்துகளை பரப்பி வந்ததாக பயிற்சியாளர் நாகராஜன் மீது புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் பூக்கடை காவல்துறையினர் பயிற்சியாளர் நாகராஜன், பயிற்சியில் ஈடுபட்ட மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 4 வீராங்கணைகள் பாலியல் புகார் சுமத்தினர். இதனால் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த அதிர்ச்சியில் பயிற்சியாளர் நாகராஜன் நேற்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (மே 29) பயிற்சியாளர் நாகராஜனை பூக்கடை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.