தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது! - Kalakshetra professor hari padman

மத்திய அரசின் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Police arrested Kalakshetra College assistant professor for sexually harassing female students
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்

By

Published : Apr 3, 2023, 9:16 AM IST

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலை படிப்பின் போது பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டதாகவும், தொந்தரவு காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கலை நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்த பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால் போலீசார் செல்போன் டவர் சிக்னலை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவியுடன் படித்த மூன்று சக தோழிகளிடமும் தனிப்படை போலீசார் கேரளாவிற்குச் சென்று விசாரணை நடத்தி விவரங்களைப் பெற்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் கலை நிகழ்ச்சிக்குச் சென்ற ஹரிபத்மன் நேற்றிரவு சென்னை திரும்பியதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்று அதிகாலை மாதவரத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிபத்மனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல எத்தனை மாணவிகளுக்குப் பேராசிரியர் ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எத்தனை மாணவிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளார், வேறு ஏதும் விவரங்கள் எடுத்து வைத்துள்ளாரா என போலீசார் ஹரி பத்மனின் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஏதேனும் செல்போனில் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, பல துண்டுகளாக வெட்டிய இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details