தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி நகைகளை வங்கியில் வைத்து ரூ.22 லட்சம் மோசடி - இலைஞர் கைது

தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 22 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

By

Published : Feb 19, 2023, 3:27 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: என்எஸ்சி போஸ் சாலையைச் சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி (33). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 332 கிராம் தங்க நகைகளை தம்பு செட்டி தெருவிலுள்ள ஐடிபிஐ வங்கியில் அடமானம் வைத்து ரூ.22 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக நகைக்கு வட்டியும் கட்டாமல், நகையும் மீட்காததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகைகளை ஏலம் விடுவதற்காக வங்கி அதிகாரிகள் நகைகளை சோதனை செய்தனர்.

அப்போது, அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகைகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், ஏற்கனவே இதேபோல மணப்புரம் கோல்டு லோனில் போலி தங்க நகைகளை வைத்து 18 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சிவாஜி ஹைர்சல் தான் இந்த மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக காவல் துறையினர் அவரை தேடி வந்த நிலையில் தற்போது ஹர்ஷல் சிவாஜியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, வங்கியின் நகைமதிபீட்டாளர் ஹைரிபிரசாத் என்பவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்: அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details