தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆள்மாறாட்டம் செய்து அக்காவின் சொத்து அபகரிப்பு.. திமுக வட்ட செயலாளர் கைது.. - DMK Circle Secratary arrest

உடன் பிறந்த அக்காவின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த திமுக வட்டச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணமூர்த்தி - விமலா
கிருஷ்ணமூர்த்தி - விமலா

By

Published : Nov 8, 2022, 8:01 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி, மயிலாப்பூர் திமுக வட்டச் செயலாளராக உள்ளார். நாகலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பாட்டி உயில் எழுதி வைத்துள்ளார். இவர்களது தாய் உயிரிழந்ததும் உயில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாழம்பூரில் உள்ள நாகலட்சுமிக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, தனது மனைவியும் கவுன்சிலருமான விமலாவை, நாகலட்சுமி போல ஆள் மாறாட்டம் செய்ய வைத்து தன் பெயரில் பொது அதிகாரம் செய்து கிருஷ்ணமூர்த்தி அபகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும் நாகலட்சுமிக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும் கிருஷ்ணமூர்த்தி அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரில் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்திட்ட சென்னை 124வது வார்டு கவுன்சிலர் விமலாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க :சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதி மணமுறிவு?

ABOUT THE AUTHOR

...view details