தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி - தம்பதி கைது - குற்றச் செய்திகள்

எலக்ட்ரிக் மோட்டார் பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி
Etv Bharat பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி

By

Published : Oct 1, 2022, 4:45 PM IST

சென்னை:பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “பூந்தமல்லி முனி கிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - பாண்டிய லஷ்மி தம்பதி. இவர்கள் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கிராண்ட் ஈகோ மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், தூத்துக்குடி மாவட்ட டீலர்ஷிப் உரிமையை தனக்கு தருவதாகவும் கூறினர்.

இதற்கு, 25 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு டீலர்ஷூப்பை தராமலும், பணத்தையும் திரும்ப தராமலும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தனர். பணத்தை ஏமாந்ததை அறிந்த நான் கணவன் - மனைவி இருவரையும் நேரில் சென்று சந்தித்து தரவேண்டிய பணம் குறித்து கேட்டேன். அப்போது, என்னை கட்டைகளைக் கொண்டும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பண மோசடியில் ஈடுப்பட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் வெங்கடேஷன் மற்றும் பாண்டிய லஷ்மி ஆகியோரை விசாரித்ததில் நிமேஷ் எட்வினிடம் மின்சாரத்தில் இயக்கும் இருசக்கர வாகன டீலர்ஷிப் தருவதாக கூறி ரூபாய் 25 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி பாண்டிய லஷ்மியை கைது செய்த பூவிருந்தவல்லி காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பள்ளிக்கரணை கொலை சம்பவம்...5 கல்லூரி மாணவர்களின் வாக்குமூலம்...ஒருவர் தலைமறைவு

ABOUT THE AUTHOR

...view details