தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 20 பேர் கைது! - ஐபிஎல் செய்திகள் 2023

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 20 நபர்கள் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 55 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.62,200 ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 13, 2023, 8:21 AM IST

சென்னை: சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி புதன்கிழமை(நேற்று) இரவு நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன் பேரில் திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன், அஞ்சப்பர் உணவகம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்து, 20 நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரஞ்சன் சீனிவாசன், முகமது அசிம்(24), விக்னேஷ்(31), ஜீவா(29), சரவணன்(43), இம்ரான், வெங்கடேசன்(35), அப்துல் பாரி(47) லோகேஷ் (22), விமல்ராஜ் (25), பீட்டர் (எ) ஜெயராஜ், முகமது ராசீக்(34), ஹர்ஷவர்தன்(19), சூரஜ்(28), ஜெபின் ஜோஸ் ஆண்டனி(18), வசந்தகுமார்(33), கார்த்திக்(27), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்கேயன்(29) ஆகியோர் பிடிபட்டனர்.

அதேபோல்ம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த உதய்கிரன்(19), கர்னூல் பகுதியை சேர்ந்த தேஜஸ்(20) ஆகிய 20 நபர்களிடமிருந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 55 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.52,200 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 20 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:CSK Vs RR: மஞ்சள் படையை வீழ்த்திய பிங்க் படை.. தோனியின் சாதனை முறியடிப்பு.. சிஎஸ்கே வீரர்கள் ஏமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details