சென்னை குமரன் நகர் ஜான்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரம் செயல்பட உதவக்கூடிய 8 பேட்டரிகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டதாக, கடந்த 7ஆம் தேதி ஏ.டி.எம், மைய பொறுப்பாளர் சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் இதேபோல் அடுத்தடுத்த நாட்களில் அதே பகுதியில் செயல்பட்டுவந்த ஏ.டி.எம் மையங்களில் உள்ள பேட்டரிகள் திருடப்பட்டதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து குமரன் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அனைத்து இடங்களில் திருடியது ஒரே நபர் என தெரியவந்தது. சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து குற்றவாளியை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தொடர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வருவது சைதாப்பேட்டை சாரதி நகரை சேர்ந்த பாஷா(22) என்பது தெரியவந்து. அவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அந்த இளைஞரிடமிருந்து திருடப்பட்ட 15 பேட்டரிகளையும், திருட பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்ஃபோன் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல சிலையை கடத்திய நபர் தேனியில் கைது