தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயர்லாந்திலிருந்து பார்த்த மூன்றாம் கண்: மதுரவாயலில் மாட்டிக்கொண்ட 'சைக்கோ முரளி'

போரூர்: மதுரவாயலில் பூட்டியிருந்த வீட்டிற்குள் திருட்டில் ஈடுபட்ட திருடனை அயர்லாந்திலிருந்து கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து, திருடனை பிடிக்க காவல்துறையினருக்கு வீட்டின் உரிமையாளரின் மகன் உதவியுள்ளார்.

police
police

By

Published : Oct 21, 2020, 12:19 PM IST

போரூர் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகர் 1ஆவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தர வள்ளி (67), இவர் வீட்டில் தனியாக உள்ளார். நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.

இவரது மகன் அருள்முருகன் அயர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது தனது செல்போனில் பார்த்தபோது, வீட்டிற்குள் ஆள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் போலீசார் மோகன், வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஒரு நபர் வெளியே வந்தார்.

சிசிடிவி காட்சி

அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது கையில் கத்தி, கஞ்சா, மடிக்கணினி ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிடிபட்ட நபர் செங்கல்பட்டைச் சேர்ந்த முரளி (என்ற) சைக்கோ முரளி (25) என்பதும் இவர் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் காதலில் தோல்வியுற்றதால் பிளேடால் உடல் முழுவதும் அவ்வப்போது கீறி கொள்வார் என்பதும் இதனால், சைக்கோ முரளி என இவரை அழைத்து வந்ததும் தெரியவந்தது.

சைக்கோ முரளி

கொள்ளையடித்து நான் ஒன்றும் அனுபவிக்கவில்லை. அதற்குள்ளேயே, காவலரிடம் சிக்கிக் கொள்கிறேனே என்று முரளி புலம்பியதாக காவலர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான இடங்களில் வயதான பெற்றோரை வீட்டில் தனியாக விட்டு விட்டு பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பார்கள்.

போன் மூலம் கூட தொடர்பு கொள்ளாத சில பிள்ளைகள் இருக்கும் வேளையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, ஆய்வு செய்தபோது வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த நபரை, அயர்லாந்தில் இருந்து மகன் காவலருக்கு தகவல் கொடுத்து, பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details