சென்னை அண்ணா நகர் பகுதியில் சாலையோரமாக, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்தன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் என்கிற கொள்ளையனை நெற்குன்றம் பகுதியில் செல்போன் சிக்னலை வைத்து பிடிக்க ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் விரைந்தனர். அங்கு கொள்ளையன் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டு விரட்டி பிடித்தனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணன், விக்னேஷை விரட்டி பிடிக்க முயன்ற போது இருவருக்கும் அடிபட்டது.