தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவகத்தைச் சூறையாடிய கும்பல்: சிசிடிவி மூலம் விசாரணை - காவல் துறையினர் விசாரணை

வேளச்சேரியிலுள்ள உணவகத்திற்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டை, பீர் பாட்டில், கற்களால் உணவகத்தைச் சூறையாடிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

உணவகத்தை தாக்கும் சிசிடிவி காட்சி
உணவகத்தை தாக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jun 22, 2021, 6:45 AM IST

சென்னை: வேளச்சேரி எம்ஜிஆர் நகரில் உணவகம் வைத்து நடத்திவருபவர் ராஜேந்திரன். இவருக்கு உதவியாக உணவகத்தில் இவருடைய இரண்டு மகன்களும் வேலை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக உணவகத்திற்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் உருட்டுக்கட்டை, பீர் பாட்டில், கற்களை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது, செய்வதறியாது திகைத்துப்போன உணவக உரிமையாளர், அவரது மகன்கள் அந்தக் கும்பல் மீது எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் உணவகத்தை துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ராஜேந்திரனுக்கும், அவரது மகன் ராஜ்குமாருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

உணவகத்தைத் தாக்கும் சிசிடிவி காட்சி

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல் காவல் துறையினர், உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து, அடையாளம் தெரியாத கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'சிலையுடன் குத்துச் சண்டை பயிற்சி' - போதை இளைஞரின் அடாவடி

ABOUT THE AUTHOR

...view details