தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிப்டாப் உடையுடன் புது ரூட்டில் உணவு, செல்போன் திருடும் நபர்.. சென்னை போலீசார் வலைவீச்சு! - கிரில் சிக்கன்

சென்னையில் உணவு பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறி செல்போன் மற்றும் உணவுப் பொருட்களை மட்டும் திருடும் நூதனத் திருடனை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கிரில் சிக்கனால் மாட்டிக்கொண்ட டிப் டாப் திருடன் !
கிரில் சிக்கனால் மாட்டிக்கொண்ட டிப் டாப் திருடன் !

By

Published : Jun 26, 2023, 10:12 PM IST

டிப்டாப் உடையுடன் கடையில் பொருள் வாங்கும் நபரின் சிசிடிவி காட்சி

சென்னை: சென்னையில் பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி மோசடி செய்யும் டிப் டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மாஸ்க் அணிந்து கொண்டு அரசியல் பிரமுகர் போல் இருசக்கர வாகனத்தில் வலம் வந்து உணவுக் கடைகளை மட்டுமே குறிவைத்து செல்போன் மற்றும் உணவுப் பொருட்களை திருடும் நூதனத் திருடனால் கடை உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை கே.கே.நகர் மாரியம்மன் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் உணவு விடுதியைச் சேர்ந்தவர் ஷேக் ரோகித்துல்லா. இவர் பீகாரைச் சேர்ந்த ஊழியர். இவர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் நேற்று இரவு டிப்டாப் ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து 760 ரூபாய்க்கு கிரில் சிக்கன் ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டதாகவும், பின்னர் போன் கொண்டுவர மறந்துவிட்டதால், தன் வீடு அருகில் இருப்பதாக கூறி அங்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாரு கூறி பார்சலை வாங்கிக் கொண்டு உள்ளார்.

பின் கடையில் வேலை பார்க்கும் ஹிந்தி மட்டும் தெரிந்த வட மாநில ஊழியர் ஷேக் ரோகித்துல்லாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை காட்டி மேலே தனது வீடு இருப்பதாகவும், நான் செல்போனை வீட்டில் மறந்து வைத்து விட்டதாகவும், தன் செல்போனை கொடுத்தால் அதன் மூலம் தனது அம்மாவிற்கு கால் செய்து பணத்தைக் கொடுக்குமாறு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

பின் அவர் கூறிய குறிப்பிட்ட வீட்டு கதவை திறந்தவர் தான் எந்த சிக்கனும் வாங்கவில்லை எனக் கூறியதை அடுத்து ஊழியர் ஷேக் ஒன்றும் புரியாமல் கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது செல்போனுடன் அந்த மர்ம ஆசாமி மாயமாகியுள்ளார். இதனை அடுத்து தனது கடை உரிமையாளர் மூலம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் ஷேக் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். அப்போது இதேபோன்று டிப்டாப் ஆசாமி பல கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்குவது போன்று வாங்கிவிட்டு, அதன் பின் பணம் தருவதாக அழைத்துச் சென்று செல்போன் அல்லது வாங்கிய உணவுப் பொருட்களுடன் மாயமாகி விடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அதே பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் 2,500 ரூபாய்க்கு லட்டுக்களை ஆர்டர் செய்து விட்டு பணத்தை தருவதாக கூறி அழைத்துச் சென்று லட்டுகளுடன் தப்பி சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு உணவகங்களில் ஆர்டர் செய்து பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று மோசடி செய்துவிட்டு மாயமாகும் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: யூ டர்ன் திரும்புவதில் குளறுபடி... பாதசாரியை மோதி நிற்காமல் சென்ற கார்!

ABOUT THE AUTHOR

...view details