சென்னை:பாரா ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட்24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள், ஒன்பது விதமான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று பதங்கப்பட்டியலில் 24ஆவது இடத்தைப் பிடித்தது. உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2ஆவது முறையாக பதக்கம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார். கடந்தமுறை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை காவல் துறையினர் சார்பில் மாரியப்பனை கௌரவிக்கும் விதமாக, சென்னை, பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சிவப்பு கம்பள வரவேற்பு