தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவாலயத்தில் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு - சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

சென்னை: வைரமுத்து தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமூக வலைதளங்களில் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

Twitter protests
ட்விட்டர் எதிர்ப்புகள்

By

Published : Feb 25, 2021, 6:38 AM IST

'உடன் பிறப்புகளின் தலைவன் உணர்வு ஒன்றுகூடல்' என்னும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. ஆ. ராசா, இயக்குநர் கரு. பழனியப்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்று உரை ஆற்றினர்.

இந்நிலையில் பாடகி சின்மயியால் 'மீடூ' குற்றச்சாட்டுக்கு உள்ளான கவிஞர் வைரமுத்து இந்த நிகழ்விற்குத் தலைமை தங்குவதற்கு கடும் எதிர்வினையை சமூக வலைதளத்தில் பல்வேறு பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆற்றினர்.

ட்விட்டர் எதிர்ப்புகள்

இது தொடர்பாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வைரமுத்துவுடன் தங்களை வெளிப்படையாகத் தொடர்புபடுத்தி காட்டிவருகின்றனர். இது அவர்கள் வைரமுத்துவுடன் நிற்பதைக் காட்டுகிறது. பிறகு என்னை கேள்வி கேட்கின்றனர் ஏன் தாமதமாக குற்றஞ்சாட்டியுள்ளீர்கள் என்று" எனக் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் ட்விட்டரில் திமுகவை விமர்சித்துப் பதிவிட்டனர். வைரமுத்து கவிதைகளுக்கு நாங்கள் ரசிகர்கள், ஆனால் 'மீடூ'வில் கேள்வி கேட்கக் கூடாது எனவும் பதிவிட்டுள்ளனர்.

ட்விட்டர் எதிர்ப்புகள்

மேலும் கவிஞர் வைரமுத்து மீது 'மீடூ' குற்றச்சாட்டுகள் இருக்கும்போது தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவர்களான திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேடையைப் பகிர்ந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இப்படிச் செய்துவிட்டு திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இதையும் படிங்க: காவி உடையில் திருவள்ளுவர்: திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம் - வைரமுத்து ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details