தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவிஞர் சினேகனுக்கு திருமணம்!

கவிஞரும், பாடலாசிரியருமான சினேகனுக்கும் நடிகை கன்னிகாவுக்கும் வரும் 29ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/25-July-2021/12568211_snehan.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/25-July-2021/12568211_snehan.jpg

By

Published : Jul 25, 2021, 5:21 PM IST

சென்னை: தமிழ் திரைப்படங்களில் பாடலாசிரியராக பணியாற்றுபவர் கவிஞர் சினேகன். ஒருசில திரைப்படங்களில் நடித்த சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதற்கு பின்னர் நடிகர் கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்நிலையில் கவிஞர் சினேகன் - நடிகை கன்னிகா ஆகியோருக்கு வரும் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம்

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

“எனக்கும், கன்னிகாவிற்கும் வருகிற 29-07-2021 வியாழனன்று, சென்னையில் மக்கள் நீதி மய்ய தலைவர் டாக்டர் கமல் ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

கவிஞர் சினேகனுடன், நடிகை கன்னிகா

இந்த திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ்நிலையில் காலம் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதால், உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது.

அது நீங்களும் அறிந்ததே. இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது, மனிதர்களுக்கே பேராபத்தாக இருக்கிறது. நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும், தனி மனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் திருமணம் நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பதிலடி கொடுத்த யுவன் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details