தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! ஒன்றிய செயலாளர் மீது போக்சோ - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திருச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒன்றிய செயலாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

marxist communist  union secretary  pocso case  marxist communist union secretary  trichy news  trichy latest news  sexual harassment  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை  பாலியல் தொல்லை  ஒன்றிய செயலாளர் மீது போக்சோ  போக்சோ  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  லால்குடி அனைத்து மகளிர் காவல்துறை
பாலியல் தொல்லை

By

Published : Nov 7, 2022, 11:42 AM IST

திருச்சி: லால்குடி அருகே பள்ளி மாணவிக்கு நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

லால்குடி அருகே மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (41). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளர் ஆக பதவி வகித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் 11ம் வகுப்பு மாணவிக்கு நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தந்தை உரிய ஆதாரத்துடன் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர், ஜெகதீசன் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள்..

ABOUT THE AUTHOR

...view details