பாமக வழக்கறிஞர் பாலு இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ராமதாஸ் நில அபகரிப்பு விவகரம்: ஸ்டாலின் மீது பாமக புகார்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சமூகத்தினரின் சொத்துக்களை அபகரித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாமக புகார் அளித்துள்ளது.
அப்போது, “வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை தனது குடும்பத்தினர் பெயருக்கு ராமதாஸ் பெயர்மாற்றம் செய்துள்ளார் என்று ஸ்டாலின் அரக்கோணம் பரப்புரையில் பேசியது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதால், அவர் பேசியது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது” என்றார்.
மேலும், அந்த கோரிக்கைக்கு இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்காததால், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தேர்தல் பரப்புரையில் முன்வைத்த ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி சார்பாக நான் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவைக் கொடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.