அரசு வேலைகளில் மத்தியப் பிரதேச மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விழா ஒன்றில் பேசிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "அரசு வேலைகளில் மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை தங்கள் மாநில இளைஞர்களுக்கு வழங்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் போன்று தமிழ்நாட்டிலும் அரசு வேலை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், “மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'அரசு வேலைகளில் ம.பி., இளைஞர்களுக்கே முன்னுரிமை' - சிவராஜ் சிங் சவுகான்