சென்னை:பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் தொடர்பு இல்லை; விசாரணை அறிக்கையை ஆளுநருக்கு தர மாட்டோம்; ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும்.
எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தைக் காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.