கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்திற்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக கடந்த ஒரு மாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இதன் ஆறாம்கட்ட போராட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, "வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை மட்டும்தான் பாமக கேட்கிறது. இதனால் மற்ற பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இன்றையப் போராட்டத்தில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.