வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாமக கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாமக தொண்டர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்: ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு - PMK
சென்னை: வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் சென்ற பாமகவினரை பெருங்களத்தூரில் காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர். இதனால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
![பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்: ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு பாமகவினர் சாலை மறியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9721785-471-9721785-1606797193776.jpg)
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கிச் செல்லும் பாமக கட்சியைச் சேர்ந்தவர்களை பெருங்களத்தூரில் சேலையூர் சரக உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறி போராட்டம் நடத்துவதால் கானாத்தூர், தாம்பரம், செங்குன்றம் பகுதிகளில் வாகனச்சோதனை சாவடி அமைத்து பாமகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பிவருகின்றனர். இதனால் சென்னையிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.