இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடைத்தேர்தல்ஆலோசனை கூட்டம்; நிர்வாகிகளுக்கு பாமக அழைப்பு!
சென்னை: அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாமக சார்பில் ஆலோசனைக் கூட்டம், இன்று முதல் (மே.3) நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அடுத்தக்கட்ட பரப்புரை உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துத் தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறவுள்ளது.
மே.3 ஆம் தேதி (இன்று) சூலூரிலும், 4 ஆம் தேதி அரவக்குறிச்சியிலும், 5 ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலும், 6-ஆம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பொறுப்பு வகிக்கும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக பொறுப்பாளஎர்கள் கலந்து கொள்வார்கள், என்று கூறப்பட்டுள்ளது.