தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலநிலை அவசர நிலையை பிரகடனத்தப்பட வேண்டும் - பாமக கோரிக்கை! - பாமக காலநிலை மாற்றம்

சென்னை: காலநிலை அவசர நிலையை தமிழ்நாடு அரசு உடனடியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

pmk-leader-g-k-mani-give-petition-to-cm-to-declar-emergency-on-climate-change

By

Published : Sep 19, 2019, 7:18 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்த பாமக மாநில தலைவர் ஜி.கே மணி தமிழ்நாடு அரசு காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய அவர்," தற்போதைய சூழலில் காலநிலை மாற்றத்தால், சாமானிய மக்கள் மிகுந்த பாதிப்படைவார்கள். இதைத் தடுக்கும் வகையில் காலநிலை அவசர நிலையை தமிழ்நாடு அரசு உடனடியாக பிரகடனப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

ஜி.கே.மணி பேட்டி

ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் காலநிலை மாற்றத்தை புரிந்துகொண்டு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதேபோல் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடமும் துணை முதலமைச்சரிடமும் பாமக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் 23ஆம் தேதி முதல் ஒரு வாரகாலம் பாமக சார்பிலும் காலநிலை அவசரநிலை பற்றி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ஐந்து கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டவேண்டும்:அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details