தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#SocialJusticeDay பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி- ராமதாஸ் ட்வீட்

பெரியார் பிறந்ததினமான செப்டம்பர் 17ஆம் தேதி இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் இன்று அறிவித்த நிலையில், பாமகவின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

pmk-founder-dr-ramadoss-tweet-on-social-justice-day
#SocialJusticeDay பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி- ராமதாஸ் ட்வீட்

By

Published : Sep 6, 2021, 1:14 PM IST

சென்னை:பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள தலைமைச் செயலகம், தொடங்கி அனைத்து அலுவலகங்களிலும் சமூக நீதிநாளான்று உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு, பாஜக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

1987ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள்தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காக போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை செப்டம்பர் 17ஆம் நாள்தான் சமூக நீதி நாள். 33 ஆண்டுகளாக செப்டம்பர் 17ஆம் நாளை சமூகநீதி நாளாக கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் சமூக நீதி மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அதே நாளில் தான் ’சுக்கா... மிளகா... சமூகநீதி’ நூல் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பாமக சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாள் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details