தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன் மீது தேர்தல் ஆணையத்தில் பாமக புகார்

சென்னை: பாமக வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் திருமாவளவன் மீது நடவடிக்கைகோரி தேர்தல் ஆணையத்தில் பாமக புகார் அளித்துள்ளது.

பாமக வழக்கிறஞர் பாலு

By

Published : Apr 15, 2019, 5:25 PM IST

பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை இன்று அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் படித்து வேலைக்காக காத்திருக்கும் தலித் இளைஞர்களை பயன்படுத்தி அவர்களது எதிர்காலத்தை பற்றியும் கவலைப்படாமல் பாமகவுக்கு எதிரான வன்முறையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஈடுபடுத்தி வருகின்றார். எங்கள் இளைஞரணி தலைவர் அன்புமணி மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளர்கள் பரப்புரைக்கு செல்லும் இடங்களில், குறிப்பாக தலித்துக்கள் வாழும் பகுதிகளில் இதுபோன்ற வன்முறையை திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை கோரி பாமக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்" என்றார்.

பாமக பாலு செய்தியாளர்கள் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details