தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் துரிதகதியில் வியூகங்களை வகுத்துவருகிறது. முக்கியமாக பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்து தங்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடும் வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்: முதற்கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவித்த பாமக - பாமக 5 பேர்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களில் முதற்கட்டமாக ஐந்து பேரை அக்கட்சி அறிவித்துள்ளது.
PMK
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏழு மக்களவைத் தொகுதிகளும்ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கியுள்ளது.மக்களவைத் தொகுதிகளில் ஐந்து இடங்களுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட ஐந்து வேட்பாளர்களின் விவரம்:
- தருமபுரி - அன்புமணி
- விழுப்புரம் - வடிவேல் ராவணன்
- கடலூர் - கோவிந்தசாமி
- அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி
- மத்திய சென்னை - சாம் பால்