சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பல நாடுகளை ஆட்க்கொண்டுள்ளது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் வரும் 14ஆம் தேதிவரை பிறப்பிக்கப்படுள்ளது.
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை - பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
சென்னை: காரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன். கரோனா பரவல் முழுமையாக தடுக்கப்படும்வரை ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரை கேட்டுக்கொண்டேன். இதுகுறித்த கூடுதல் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமர் கோரினார். உலக அளவில் கரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி!