இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. அடுத்த 48 நாட்களுக்கு புவிவட்டப் பாதையை சுற்றிவரும் சந்திரயான் 2 செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி அல்லது 7ஆம் தேதி நிலவில் இறக்கப்படவுள்ளது. பாகுபலி என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி மேக் 3 ஏவுகணை எந்த தடுமாற்றமும் இல்லாமல் அதன் இலக்கை சென்றடைந்திருக்கிறது. சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் இந்தியா ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அன்புமணி பாராட்டு - Anbumani ramdoss
சென்னை: விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையை சுற்றி வரத் தொடங்கியுள்ளது. இந்த சாதனையை படைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
anbumani
சந்திரயான்2 உருவாக்கத்தில் பெண் விஞ்ஞானிகள் பங்கு இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த வனிதாமுத்தையா தான் சந்திரயான் 2 திட்ட இயக்குனர் ஆவார். இவர் தவிர மிஷன் இயக்குனர் ரீது காரித்வாலும் பெண் விஞ்ஞானி ஆவார். அதோபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்மதியும் இதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.இந்த சாதனையில் முக்கிய பங்கு வகித்த அனைவருக்கும் பாமக சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.