நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான பி.எம்.மோடி திரைப்படத்தில்விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளை மீறி மோடி படத்தை வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், திரைப்படம் வெளியாவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பி.எம்.மோடி படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை! - ஓமங்குமார்
விவேக் ஓபராய் நடித்துள்ள பி.எம்.மோடி திரைப்படம் வெளியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் பி.எம்.நரேந்திரமோடி திரைப்படம் வெளியாக தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில் மோடி படத்தை வெளியிடத் தடை விதித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இது போன்ற திரைப்படங்கள் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது வெளியிடப்பட்டால் அது வாக்களர்களின் சிந்தனையை பாதிக்கும் என்பதாலும், 100% நேர்மையாக தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் இத்திரைப்படங்கள் வெளியானால் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.