தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமருடன் முதலமைச்சர் பேச்சு: கூடுதல் ரேபிட் கருவிகளை வழங்குவதாக உறுதி! - பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி தொலைபேசியில் பேச்சு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கூடுதல் ரேபிட் கருவிகளை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

PM Narendra Modi pledges to provide additional Rapid test kit to TN CM palaniswami's request
PM Narendra Modi pledges to provide additional Rapid test kit to TN CM palaniswami's request

By

Published : Apr 20, 2020, 10:25 AM IST

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 14ஆம் தேதிவரை 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. கரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இருப்பினும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாட்டிற்கு அதிகமாக ரேபிட் கிட் சோதனைக் கருவியை வழங்க வேண்டும் என்று மோடியிடம் முதலமைச்சர் கோரிக்கைவிடுத்துள்ளார். கோரிக்கையை ஏற்ற பிரதமர் கூடுதல் ரேபிட் கருவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் மீது தவறான புகார்: திமுக எம்.பி., எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details