சீனா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இந்தியா வர அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்ற ஜி ஜின்பிங் வருகின்ற 11ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி - ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேசுகின்றனர்.
மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை! - tourist place banned,
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி -சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், எல்லை சிக்கல், இருநாட்டின் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசவிருக்கின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவரும் நிலையில், தலைவர்களின் சந்திப்பு முடியும வரை மாமல்லபுரத்தில் இன்று முதல் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. அறிவிப்பைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை ஆய்வு செய்துவருகிறது.