தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எல்லைப் பிரச்னையில் பிரதமர் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார்' - ஓபிஎஸ் புகழாரம்

சென்னை: இந்திய-சீன எல்லைப் பிரச்னையில் பிரதமர் மோடி மிகுந்த புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டுவருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புகழாரம் தெரிவித்துள்ளார்.

ops
ops

By

Published : Jun 19, 2020, 10:52 PM IST

இந்திய-சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், "வாழ்வதற்கான சூழலற்ற நிலப்பரப்பான லடாக் எல்லைப் பகுதியில் தேசத்துக்காகப் போராடும்போது, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த 20 இந்திய வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி கடினமான ஒரு நேரத்தில் நாட்டை வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.

முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் நமது நாடு போராடிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் சீனத் தரப்பினரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக மிக நெருக்கடியான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதியில் ஒரு அங்குலம் கூட ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்படாது. அதிமுக முன்னாள் தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியதைப் போல, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் எந்தச் சமரசமும் இருக்க முடியாது. சமீபத்தில், இறந்த 20 ராணுவ வீரர்களில் ஒருவரான ஹவில்தார் கே. பழனி தமிழ்நாடு மாநிலத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டம் நம் நாட்டின் தென்முனைக்கு அருகில் உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு இந்தியரும் நாட்டைப் பாதுகாப்பார்கள், மிகச்சிறந்த தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையே இவ்வீரரின் மறைவு நிரூபித்திருக்கிறது. பிரதமர் மோடி இந்த நெருக்கடியான நிலைமையைக் கையாள்வதில் மிகுந்த புத்திசாலித்தனத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

இந்திய அரசும் நமது பாதுகாப்புப் படைகளும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டுவருகிறார். தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை மட்டுமல்ல, நம்முடைய எதிரிகளின் முயற்சிகளையும் நிச்சயமாக வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2115 பேருக்கு தொற்று

ABOUT THE AUTHOR

...view details