இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதற்காக இரு தலைவர்களும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர். இவர்களின் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கமாக தான் அணியும் உடையைவிடுத்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.