சென்னை: இந்தியாவின் ஒற்றுமை சின்னம் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு நாடு முழுவதிலும் இருந்து எட்டு புதிய ரயில் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பச்சை கொடியசைத்து நான்கு புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் சென்னையிலிருந்து கேவாடியா செல்லக்கூடிய புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.