இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் மட்டுமே தீவிரமாகப் பரவிவந்த கரோனா தற்போது பிற மாவட்டங்களிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாநில அரசும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து தொற்றைக் குறைக்க முயற்சி செய்துவருகிறது. இச்சூழலில், இன்று (ஜூலை 19) காலை பிரதமர் மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், கரோன தடுப்புப் பணிகள், மருத்துவச் சிகிச்சை விவரங்கள் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தார்.