தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மோடி பங்கேற்பு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று(ஜூலை 29) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மோடி பங்கேற்பு
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மோடி பங்கேற்பு

By

Published : Jul 29, 2022, 8:04 AM IST

சென்னை: சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று(ஜூலை 28) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வேறு சில விழாக்களிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவி மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 முதல் 11.30 மணி வரை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கிறார். பிரதமர் வருகை முன்னிட்டு பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:44th Chess Olympiad - 'விளையாட்டில் தோற்பவர்கள் எவரும் கிடையாது' - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details