கடந்த இரண்டு தினங்களுக்கு சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலை செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரசார் பாரதியின் தலைமை செயல் அலுவலர் சசி ஷேகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.