தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி - பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி மீண்டும் இதே மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார் என தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி
மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி

By

Published : Feb 14, 2021, 2:25 PM IST

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம், கல்லணை, கால்வாய் புதுப்பிப்பு, சென்னை ஐஐடி டிஸ்கவரி கேம்பஸ் வளாக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டப் பல்வேறு அரசுத் திட்டங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன.

இந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.14) டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இதையடுத்து, அவர் கேரளா செல்ல உள்ளார்.

இதற்கிடையில், இதே மாதத்தில் வரும் 25ஆம் தேதி மீண்டும் பிரதமர் தமிழ்நாடு வரவுள்ளார் என தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறியுள்ளார். அந்நாளில் அவர் கோயம்புத்தூருக்கு வருகை தர இருப்பதாகவும், அங்கு கூட்டணி குறித்து பேசப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி

முன்னதாக, அரசு விழாவில் பங்கேற்கவரும் பிரதமர் மோடி அங்கு தலைவர்களிடம் அரசியல் குறித்து பேசமாட்டார் எனத் தெரிவித்திருந்த நிலையில், வரும் 25ஆம் தேதி பிரதமரின் தமிழ்நாடு பயணம் முழுக்க முழுக்க தேர்தலை மையப்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா வருகை, கூட்டணி, தேர்தல் சீட் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் இந்த வருகையின்போது அமையவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டிற்கு தேர்தல் தேதி தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையில், பிரதமரின் தமிழ்நாட்டுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது.

மேலும், வரும் 21ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், 19ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details