தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 2 ரிசல்ட்: 22ஆம் தேதி முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்! - tamilnadu

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், 22ஆம் தேதி ஆன்லைன் மூலம் மறு கூட்டலுக்கு விண்னப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

school

By

Published : Apr 19, 2019, 9:44 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பார்த்தப்பின்னர் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணபிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.4.2019 முதல் 24. 4.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களின் விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு மார்ச் 2019 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள் சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்பு துணைத்தேர்வு 6.6.2019 முதல் 13.6.2019 வரையிலான நாட்களிலும், மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details