பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு முக்கியமாக கருதப்படும் கணக்கு, விலங்கியல் பாடத்திற்கான தேர்வுகள் இன்று நடைபெற்றன.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது,
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு முக்கியமாக கருதப்படும் கணக்கு, விலங்கியல் பாடத்திற்கான தேர்வுகள் இன்று நடைபெற்றன.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது,
அதேபோல் விலங்கியல் பாடத்திலும் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. 1, 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் கடினமாக இருந்தன. ஆனால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. வணிகவியல் பாடத்தில் முதல் முறையாக கேள்வித்தாள் முறை மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அதில் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவை மிகவும் கடினமாகவே அமைந்திருந்தன.
அதேபோல் 3 மற்றும் 2 மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்களை மாணவர்கள் எளிதில் எழுதும் வகையில் இருந்தது. இந்தப் பாடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் எந்த வித பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் 100 சதவிகித மதிப்பெண் பெறுவது என்பது மிகுந்த சிரமத்திற்கு உரியது என மாணவர்கள் கூறினர்.