தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தடுப்பூசி போடும் முன் ரத்த தானம் செய்யுங்க’ - மருத்துவர்கள் வேண்டுகோள்! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை: தடுப்பூசி செலுத்திய 70 நாள்களுக்கு பின்னரே மீண்டும் ரத்த தானம் செய்ய முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னரே ரத்த தானம் செய்யுமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் வேண்டுகோள்
மருத்துவர்கள் வேண்டுகோள்

By

Published : Apr 29, 2021, 2:21 PM IST

இந்தியாவில் வடமாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.

உயிரிழப்புகளைத் தவிர்க்கும்வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுமுதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட இருக்கின்றன. அதே சமயம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 70 நாள்களுக்குப் பின்னரே ரத்த தானம் செய்ய முடியும்.

புற்றுநோய், சாலை விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படும். இதனால் தற்போது ரத்தப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயகர சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் தானாக ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் பேசும்போது, “கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இது குறித்து அதிக அளவில் தெரிவிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துவருகிறோம்.

இது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள் முன்வந்து ரத்த தானம் செலுத்தியபின் தங்களுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க : கரோனா: இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 82.33% ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details