தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 15, 2022, 3:45 PM IST

ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் க வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை. அந்த வேட்புமனுவை ஏற்றது தவறு" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது. உரிய நேரத்தில் வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று(பிப்.15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உதயநிதி தரப்பில், மனுத்தாக்கல் செய்தபோது செலுத்த வேண்டிய வைப்பு தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாபஸ் பெற அனுமதிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சியினரின் சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது - கீதாஜீவன்

ABOUT THE AUTHOR

...view details