தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு இன்று முதல் அபராதம்!

சென்னை:  ஜனவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று முதல் அதனை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

plastic ban

By

Published : Jun 17, 2019, 1:13 PM IST

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இதில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து ஆறு மாதங்கள் எட்டிய நிலையிலும், அதை விற்போர், பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதுதொடர்பாக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதன் பயன்பாடு குறையவில்லை. எனவே, இன்று (ஜுன் 17) முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கும், விற்பதற்கும் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்பவருக்கு விதிக்கப்படும் அபராதம்

முதல் முறை பிடிபட்டால்-ரூ.25 ஆயிரம்
2ஆவது முறை பிடிபட்டால்-ரூ.50 ஆயிரம்
3ஆவது முறை பிடிபட்டால்-ரூ.1 லட்சம்
4ஆவது முறை பிடிபட்டால்-விற்பவரின் கடை உரிமம் ரத்து.

அதேபோல் பொதுமக்களின் வீடுகளில் அலுவலர்கள் சோதனை செய்கையில், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை சேமித்து வைத்திருப்பது தெரியவந்தால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details