காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் சங்கரன், "மேலை நாடுகளைப் பார்த்து இந்தியாவிலும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படுகிறது , ஆனால் இந்தியாவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு என்பது மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு 60 கிலோவிற்கு மேல் உள்ள நிலையில், நமது நாட்டில் இது வெறும் 11 கிலோவாக உள்ளது.