தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை: உடல் நிலையில் முன்னேற்றம் - plasma therapy gives positive response in corona surgery

சென்னை: கரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

plasma therapy shows progress in corona treatment
plasma therapy shows progress in corona treatment

By

Published : May 24, 2020, 4:26 PM IST

கரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு இந்திய மருத்துவக் கழகம் 42 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒன்பது நபர்களிடமிருந்து பிளாஸ்மா பெறப்பட்டுள்ளது. அதை ரத்த மாதிரி பொருந்தக்கூடிய, தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு பேருக்கு அளித்துள்ளனர். ரத்த மாதிரி செலுத்தப்பட்டவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை

ஆனாலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஆராய்ச்சியினை சரிபார்த்து தெரிவித்த பின்னரே யார் யாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரத்தையும் அதன் முன்னேற்றம் குறித்தும் தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? விவரிக்கிறார் டாக்டர் ஆஷா கிஷோர்

ABOUT THE AUTHOR

...view details