தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டங்களை உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து கிராம சபை மீட்பு வாரத்தை அக்டோபர் 12 முதல் 17ஆம் தேதிவரை நடத்துவருகின்றன.
‘கிராம சபையை உடனடியாக நடத்துக!’ - tamilnadu govt
சென்னை: கிராம சபை மீட்பு வாரத்தின் ஐந்தாம் நாளான நேற்று, ‘கிராம சபையை உடனடியாக நடத்துக!’ என்ற கோரிக்கையினைக் கொண்ட காகிதத் தாளினை நடப்பட்ட மரக்கன்றில் கட்டித் தொங்க விடுதல் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதில் கிராம சபைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் முறையிடல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
.இந்நிலையில், கிராம சபை மீப்பு வாரத்தின் ஐந்தாம் நாளான நேற்று (அக். 14), தமிழ்நாட்டில் கிராம சபைகள் வளர்ந்தோங்க வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த ஊருக்குள் ஒரு மரக்கன்று நடுதல் பணி தொடங்கப்பட்டது. அதில் ‘கிராம சபையை உடனடியாக நடத்துக!’ என்ற கோரிக்கையினைக் கொண்ட காகிதத் தாளினை நடப்பட்ட மரக்கன்றில் கட்டித் தொங்க விடுதல் ஆகிய நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.