சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது. இதனையடுத்து திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 1 லட்சத்து 45 மின் கம்பங்கள் தயராக உள்ளன. தாழ்வாக செல்லும் மின் வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மற்றப்பட்டுவருகின்றன. 80 விழுக்காடு பணிகள் தற்போது முடிவுற்ற நிலையில், பருவமழைக்கு தொடங்குவதற்கு முன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.