சென்னையில் நாளை (ஜூலை31) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், "சென்னையில் நாளை (ஜூலை.31) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! - Latest Chennai district news
சென்னை மாநகரில் நாளை (ஜூலை.31) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை
அதன்படி சென்னை மாடம்பாக்கம் பகுதிக்கு உள்பட்ட கீழ்வரும் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பேரிஸ், ஆதித்தியா நகர், நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம் மெயின் ரோடு, சாமிதாபுரம், வாடாபி நகர், சபாபதி நகர்" உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.