சென்னை:அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தைப் போல, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் அதில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மண்டல மையங்களில் நடத்திய பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.
இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வுசெய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்குகொள்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.